நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 8, 2019

கோட்டாபாய இருக்கும் இடத்தினை தேடிச்சென்று வழக்கின் ஆவணங்கள் கையளிப்பு ..!!

Monday, April 08, 2019
Tags


கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

premier group international, an investigative & security corporation என்ற அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆவணங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

கோட்டாப இருக்கும் இடத்தினை தேடிச்சென்று குறித்த அமைப்பு வழக்கின் ஆவணங்களை கையளித்துள்ளது.

வழக்கின் ஆவணங்களை premier group international, an investigative & security corporation என்ற அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கோட்டாவிடம் கையளிக்கும் ஒளிப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

படுகொலைச் செய்யப்பட்ட, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கில் தனது தந்தையான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மீது மற்றுமொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதையில் இருந்து உயிர்பிழைத்த கனேடிய தமிழர் ஒருவரின் சார்பில் குறித்த வழக்கு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது