நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 30, 2019

வவுணதீவு பொலிஸார் கொலையில் கைதான முன்னாள் போராளிகள் விடுக்கப்படவேண்டும்!


வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு இருந்தார்கள்

எனினும் அந்த சம்பவம் தொடர்பில் இரண்டு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த சந்தேக நபர் தாங்கள் தான் அந்த கொலைகளை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்

எனவே இந்த விடயத்தில் இலங்கையின் புலனாய்வுத்துறை மிகவும் பக்கச்சார்பாக செயற்படுவதாகவே நான் கருதுகின்றேன் எனவே இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!