நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 28, 2019

பயங்கரவாதத்தை தடுக்க களமிறங்குகின்றது இளைஞர்கள் படையணிநாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்களைக் கொண்ட ஊர்காவல் படையொன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் பாடசாலைகள் மற்றும் மதத்தலங்கள் உட்பட கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொதுமக்களின் பங்களிப்பனை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு மட்டக்களப்புமண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயங்கள் மற்றும் பாடசாலைகளில் குழுக்களை அமைத்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் தமிழ் எல்லைப்பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் ஊர்காவல் படைப்பிரிவினை அமைக்க நடவடிக்கையெடுக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்படவேண்டியது.