நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 28, 2019

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்த மஹிந்த!


நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.

யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் பாதுகாப்புத்துறை பிரதானிகளாக இருந்த பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். நாடு எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிக்க நீண்ட, குறுகிய கால தீர்வுக்கா நடவடிக்கைகள் பற்றி முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானிகளிடம் மஹிந்த ராஜபக்ச கேட்டறிந்தார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு பிரதானி ஜகத் ஜயசூரிய, இராணுவத்தளபதி தயா ரட்ணாயக்க, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதிகள் அட்மிரல்கள் வசந்த கரன்னகொட, மொஹான் விஜேவிக்கிரம, ஜகத் கொலம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் சந்திரா பெர்னாண்டோ, மஹிந்த பாலசூரிய, முன்னாள் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் வஹீட், முன்னாள மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரும்,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமன,  வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்த்தன, மற்றும் ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலால் பாதுகாப்புதுறை நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்ற போதும், அரசியல்ரீதியான நன்மைகள் கிடைக்குமென ராஜபக்ச தரப்புக்கள் கருதுவதாக தெரிகிறது

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!