நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 29, 2019

சற்றுமுன் கனகராயன்குளம் தாவூத் ஹோட்டலில் வெடிபொருட்கள் மீட்பு!உரிமையாளர் கைது!


வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம்  உணவகத்தில் ஆயுதங்கள் மீட்பு

சற்று முன் வவுனியா கனகராயன்குளம் தாவுத் முஸ்ஸிம் உணவகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது

வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பொலிசார் , புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் , இரானுவத்தினர் இணைந்து இன்று மாலை விசேட சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்தனர்.

இதன் போது தாவூத் முஸ்ஸிம் உணவகத்தின் விடுதி மற்றும் மலசல கூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசல கூட தாவார கூடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு கைக்குண்டு , மூன்று மிதிவெடி , பதினைந்து தோட்டாக்கள் , இரண்டு ஆர்பிஐி குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்செல்வதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னேடுத்து வருவதுடன் குறித்த நிலையத்தின் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த உணவகம் தொடர்பாக அண்மைகாலமாக பல்வேறு சர்சைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!