நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 29, 2019

பங்களாதேசில் தம்மைத்தாமே வெடிக்கவைத்த தற்கொலைக்குண்டுதாரிகள்!பங்களாதேசில் நேற்று இரண்டு தற்கொலைகுண்டுதாரிகள் தம்மைத்தாமே வெடிக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குப்பின்னர், தெற்காசிய நாடுகள் தமது உள்ளக பாதுகாப்பில் தீவிரம் காட்டிவரும் நிலையிலேயே தற்கொலைதாரிகள் இருவர் பங்களாதேஷில் தங்களைத் தாங்களே வெடிக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் அந்த நாட்டுக்கு அருகில் உள்ள நாடுகளை எச்சரிக்கையடைய வைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று பங்களாதேசில்அதன் பயங்கரவாத தடுப்பு காவற்துறை நடத்திய சோதனைகளின்போது இரண்டு ஆயுததாரிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டனர்.

இவர்கள் இருவரும், கடந்த 2016 ஆண்டு ஜூலை மாதத்தில் உணவு விடுதியொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஐ.எஸ் அமைபின் ஆதரவாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டாக்காவுக்கு வெளியே முகமத்பூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த ஆயுதாரிகள் தாக்குதலை நடத்தியபோது பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இறுதியில் தப்பிக்கமுடியாத ஆயுததாரிகள் தாங்கள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்து தற்கொலை கொண்டுள்ளனர். இந்தகுண்டுவெடிப்பினனால் அருகில் இருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளன.

இதற்கிடையே குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியை கைது செய்த காவற்துறை அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாமிடமும் விசாரணைகளை நடத்திவருகின்றது.

இதேபோல இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த ஆயுததாரிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிகை விடுத்துள்ளது.

இவ்வாறு ஒரு தாக்குதலை நடத்துவது குறித்து ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஆயுததாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக இந்தி உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவல்களால் இந்தியாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!