நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 23, 2019

வெளிநாடு போவதாக மனைவியை ஏமாற்றி தற்கொலை தாக்குதல் நடத்திய உரிமையாளர்: வெல்லம்பிட்டிய ஆயுதத் தொழிற்சாலைக்குள் நடந்தது என்ன?உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தாக்குதலின் பின்ணி, தாக்குதல்தாரிகள் பற்றி விபரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த தாக்குதலிற்கான வெடிகுண்டுகள் வெல்லம்பிட்டிய பகுதி தொழிற்சாலையொன்றில் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்பு தொழிற்சாலையென்ற பெயரில் இயங்கிய அந்த தொழிற்சாலையில், இரகசியமாக தற்கொலை குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இன்ஷாப் அஹமட் என்ற நபரிற்கு சொந்தமானதே இந்த செப்புத் தொழிற்சாலை. அவரும் தற்கொலை குண்டுதாரியாக மரணமடைந்து விட்டார்.

மிகப்பெரிய செப்பு தொழிற்சாலையான அங்கு உள்ளூர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் பணிபுரிகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் பாகிஸ்தானியர் 9, இந்தியர் 3 பேர் கைதாகியுள்ளனர்.

தொழிற்சாலையின் முகாமையாளர், மேற்பார்வையாளர், தொழில்நுட்பவியலாளர் இவர்களில் உள்ளடக்கம்.

இன்ஷாப் அஹமட் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வாங்க அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருபவர்.

தற்கொலை தாக்குதலிற்கு செல்வதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு பயணம் செல்வதாக மனைவியிடம் கூறியிருக்கிறார். ஆபிரிக்க நாடான சாம்பியாவற்கு பொருட்கள் கொள்வனவு செய்ய செல்வதாக கூறியிருக்கிறார். அவர்களின் உறவினர்களின் தகவல்படி- வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணிக்கு விமான நிலையத்தில் மனைவி கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது வழக்கத்திற்கு மாறாக, மனைவியின் கழுத்தை இறுக அணைத்து விடைபெற்றுள்ளார் என அங்கிருந்த உறவினர்கள் இப்பொழுது நினைவுகூறுகிறார்கள்.

தாக்குதல் தினமன்று காலையில் 7.30 மணியளவில், தொலைபேசியில் மனைவியை தொடர்பு கொண்ட அந்த நபர், சாம்பியாவிலிருந்து பேசுவதாக குறிப்பிட்டு, வந்த வியாபார அலுவல்கள் வெற்றியாக முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மனைவியுடன் பேசி சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் தற்கொலை தாக்குதலை நடத்தினார்.

(படங்கள் அனைத்தும் வெல்லம்பிட்டிய தொழிற்சாலைக்குள் எடுக்கப்பட்டவை)

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!