நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

” ராஜபக்ச_குடும்பம் சொன்னதால் தான் பொன்சேகாவை நியமிக்கவில்லை ” மைத்ரி அதிரடி கருத்து "


“சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க நான் தயாராக இருந்தேன். ஆனால் ராஜபக்ச குடும்பம் தான் அதனை தடுத்தது..”

இவ்வாறு நேற்று அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம் பிக்களுக்களான விசேட கூட்டம் ஒன்றவி நேற்று தனது வாசஸ்தலத்தில் நடத்தினார் ஜனாதிபதி.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை பொன்சேகாவுக்கு தாம் வழங்கவிருந்தபோதும் ராஜபக்ச குடும்பமே அதனை எதிர்த்ததாகவும் – அவர் பழிவாங்கலில் ஈடுபடுவார் என்று சொல்லப்பட்டதால் அந்த நியமனத்தை வழங்கவில்லை என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

“ எந்த புலனாய்வுத் தகவலும் எனக்கு கிடைக்கவில்லை .ஆனால் இனி நாம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசை செய்ய முடியவில்லை.மஹிந்தவிடம் கொடுத்தால் அவராலும் செய்ய முடியவில்லை.
இப்போது ரஞ்சித் மத்துமபண்டாரவை அந்த அமைச்சராக மீண்டும் நியமிக்குமாறு என்னிடம் ரணில் தலைமையில் ஒரு கோஷ்டி வந்து கேட்டது. ஏற்கனவே அவரால் ஏதும் செய்யமுடியாமற் போனதால் ஆடை உடுத்திக் கொண்டா இதனை கேட்கிறீர்கள் என்று நான் ரணிலிடம் கேட்டேன்.பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரை பதவி விலக கோரியுள்ளேன் . அரசியலமைப்பு கவுன்சில் பொலிஸ் மா அதிபரை தீர்மானிக்கும் . தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்..’

என்றார் ஜனாதிபதி .

இங்கு பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!