நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 4, 2019

வடகிழக்கு மக்களின் ஆதரவுடன் விரைவில் ஆட்சிமாற்றம் - மஹிந்த

வடக்கு, கிழக்கு மாகாண  மக்களின் முழுமையான ஆதரவுடன் மீண்டும் எமது தலைமையிலான  அரசாங்கம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண  மக்களின் தேவைகளை அறிந்து  அபிவிருத்திகளை முன்னெடுத்தது.  மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உணரப்பட்டது. 

ஆனால்  தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று  பாராளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள். எதிர்க்கட்சியி பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினருக்கும்  எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்றில் எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்ததார்.

இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, சுசந்த புஞ்சி நிலமே, அனுர பிரியதர்ஷன  யாப்பா, வியாழேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.