நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடந்த பல மில்லியன் பெறுமதியான மருந்து, நவீன உபகரணங்கள்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவின் பொறுப்பு மருந்தாளர்கள் இருவருக்கிடையிலான போட்டியால் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய மருந்துப் பொருட்கள் காலாவதியான நிலையில் களஞ்சிய சாலையில் தேங்கியிருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

கணக்காய்வு பிரிவின் விசாரணைகளில் இந்த விவகாரம் அம்பலமானதை தமிழ்பக்கம் அறிந்தது.

மருந்தாளர்கள் இடமாற்றமின்றி தொடர்ச்சியாக 10 – 20 வருடங்கள் ஒரே இடத்தில் கடமையாற்றி வருகிறார்கள். இதனால் கடமை முறையை தமக்கு ஏற்றபடி மாற்றியமைத்து செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், வைத்தியர்களின் அறிவுரைப்படி, உரிய மருந்துக்களை பெற்று விநியோகிக்கவில்லையென குறிப்பிடப்படுகிறது. இந்த அசமந்த போக்கால், மருந்துகளின் காலாவதி திகதிக்கு முன்னர் நோயாளர்களிற்கு வழங்கப்படாமல் களஞ்சியசாலைகளில் தேங்கியிருந்துள்ளது.

அத்துடன் நோயாளர்களின் உயிர்க்குறிகளை அளவிடும் மிக பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களும், அவற்றின் உத்தரவாத காலத்தை (warranty) கடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. வடக்கு வைத்தியசாலைகளில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதாக பல தரப்பினரும் குறிப்பிட்டு வரும் நிலையில், உத்தரவாத காலம் முடிந்தும் அந்த கருவிகள் விநியோகிக்கப்படாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, தமிழ்பக்கத்தின் அரசியல் செய்திகளை கந்தையா பாஸ்கரனிற்கு சொந்தமான ஜேவிபி, தமிழ்வின் இணையங்கள் திருடி வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!