நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 1, 2019

சீனாவை சந்தித்த பின் மகிந்தவை காப்பாற்ற முன்னணியின் நிலைப்பாடு சடுதியாக மாற்றம்; விக்கி மீது கடும் தாக்கு!

Monday, April 01, 2019
Tagsகலப்பு பொறிமுறையை விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என எச்சரித்திருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுமந்திரனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்றாா்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

சிறிலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில் சிறீலங்கா அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது.

அதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம் இந்நிலையில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளாா்.

அதனை அமைக்கலாமா? இல்லையா? என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டு வரு முயல்கின்றார். சிறிலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றாா்.

இதேவேளை, விக்னேஸ்வரன் தொடர்பாக மென்மையான அணுகுமுறையை இதுவரை முன்னணி கடைப்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், சீன தூதரகத்தின் அரசியல் விவகாரங்களிற்கு பொறுப்பான அதிகாரியை, கடந்த மாத மத்தியில் யாழ்ப்பாணத்தில் இரகசியமாக சந்தித்த பின்னர் முன்னணியின் நிலைப்பாடு மாறியிருப்பதாக கருதப்படுகிறது.