நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 30, 2019

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

வவுனியா குழுமாட்டுசந்தியில் இன்று காலை விபத்து நடந்துள்ளது.

வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக குழுமாட்டுசந்தி பகுதியிலுள்ள பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்றது. அதேநேரத்தில் சுந்தரபுரத்திலிருந்து வந்த தனியார் பேருந்து தரித்து நின்ற பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டது. இதன் போது விபத்து நடந்துள்ளது.

இவ் விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன், இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.