நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 3, 2019

பிரபாகரனைக் நந்திககடலில் காணாமல் செய்தது போன்று அவரின் மைத்துனரையும் செய்ய முடியும்! மிரட்டும் இராணுவ தளபதி!

Wednesday, April 03, 2019
Tags


நாட்டை இரண்டாக பிரிப்பதாக கூறிக்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் வைத்து இல்லாமல் செய்ததாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜெனீவாவில் வைத்து நாட்டை நான்காக பிரிப்பதாக கூறிய பிரபாகரனின் மைத்துனரால் தாம் மேற்கொள்ளும் நடவடிக்கையை தாங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பியகம பிரதேசத்தில நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,


 
30 வருட யுத்தத்தை தோல்வியடைய செய்த எங்களுக்கு இந்த யுத்தத்தின் இறுதியாக அடையாளம் காணப்பட்ட நான்காவது ஈழ யுத்தத்தை முடிப்பதற்கு இரண்டு வருடங்களுடம், பத்து மாதங்களும் தேவைப்பட்டன.

யுத்தத்தின் போது 10,500 இராணுவ வீரர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்தனர். அத்தோடு 24,000 இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த உயிரிழப்புகளும், காயங்களும் உங்களுக்கும், உங்களுடைய தலைமுறைக்கும் அச்சமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு இழப்புக்களையும், தியாகங்கங்களையும் செய்துள்ளனர்.

அன்று துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும் பிரபாகரனால் பெற்றுக்கொள்ள முடியாத ஈழ இராச்சியத்தை பல்வேறு இழப்புக்களின் மத்தியில் வெற்றிகொண்டது இன்று உங்களுடைய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்தவர்களுக்கு வழங்குவதற்காக அல்ல.

அன்று நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் போன்ற இனங்கள் இருந்தன. இன்று அவற்றை புறந்தள்ளிவிட்டு ஒன்று நாட்டிற்கு ஆதரவளிக்கும் இனம் எனவும், மற்றையது நாட்டிற்கு துரோகம் செய்யும் இனம் என்றும் மட்டுமே முன் நிற்கிறது.

நாட்டிற்கு ஆதரவளிப்போர் என்ற வகையில் நல்லிணக்கம் என்ற பெயரில் இந்த அரசாங்கம், தமிழ் புலம்பெயர்ந்தோருடனும் அன்று வடக்கில் பிரபாகரனின் அதிகாரம் இருந்தபோது அதன் காலடியில் கிடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இணைந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நாட்டின் இறைமையை காட்டிக் கொடுப்பதற்கு இடமளிக்க முடியாது.

இராணுவத்தினர் இளமையை தெலைத்து பெற்ற வெற்றியானது ஒரே கொடி, ஒரே நீதியின் கீழ் அனைத்து இனமும் வாழ்வதற்கானதாகும். ஒரு இனத்திற்கு அதிக அதிகாரமும் மற்றைய இனத்திற்கு குறைவான அதிகாரமும் வழங்குவது நல்லிணக்கமல்ல.

இதனால் குரோதமும், வெறுப்புமே வரும். இதன்மூலம் ஒன்றிணைவதை தாண்டி பிளவே ஏற்படும். வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் அரசாங்கத்தின் ஆதரவுடனும், மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடனும் இனவாதத்தையும், பிரிவினையையும் வெளிப்படுத்துகின்றனர்.

அதற்கு எதிராக அரசாங்கமும், பொலிஸாரும் எந்த நடவடிக்கையையும் எடுக்காதுள்ளனர். இனவாதத்தை தூண்டுகின்ற வகையிலான பதிவுகளை பேஸ்புக்கில் இட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

ஆனால் இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் வடக்கு அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதுள்ளனர். அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

பிரபாகரனின் மைத்துனர் சிவாஜிலிங்கம் ஜெனீவாவிற்கு சென்றிருந்த போது எங்களுடைய கோரிக்கையை வழங்காவிட்டால் நாட்டை இரண்டாக அல்ல நான்காக உடைப்போமெனக் கூறினார். உங்களுக்காக நாட்டை இரண்டாக பிரிப்பதாகக் கூறிக்கொண்டு வந்த பிரபாகரனை 2009ஆம் ஆண்டு நந்திக்கடலில் இல்லாது செய்த எங்களுக்கு நாட்டை நான்காக பிரிப்போமென கூறி கொண்டு வருவோரால் நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாட்டை தாங்க முடியாது.

பயங்கரவாதத்திடம் இருந்து நாட்டை மீட்டெடுத்து, குண்டுவெடிப்புக்களை இல்லாது செய்து நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், சமாதானமாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியது தவறென்றால் வெலிக்கடை அல்லது தூத்துக்குடி சிறையிலும் சென்று எங்களுடைய வாழ்க்கையை கழிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.