நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 2, 2019

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம்!! நாசமாகும் ஈழத்து யுவதிகள்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மேலும்.,

வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் லண்டனுக்கும், பெண் வவுனியாவுக்கும் சென்ற நிலையில் சில நாட்கள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தனர், இந்நிலையில் இளைஞனுக்கு பெண்னின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உள்ள அறையொன்றில் தொலைபேசி காணொளி அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் கத்தியை எடுத்துக்கொண்டு கழுத்தையறுக்க எத்தனித்திருந்த நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன, அதில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட, தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் பல இடம்பெற்றுள்ளது,

திருமணம் என்பது இரண்டு மனங்கள் புரிந்து இணைவது தவிர, போலி ஹௌரவத்திற்காக யார்? எப்படியானவர் என்று கூட தெரியாமால் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க துடிக்கும் வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம் என சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!