நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

கம்ப ராமாயனத்தை எழுதியவர் சேக்கிழார் என்றும்,சுதந்திர தினத்தையே மாற்றி கூறி தடுமாறும் தலைவர்களின் மத்தியில் சீமான் தவிர்க்க முடியாதவர், ஏன்???

Wednesday, April 17, 2019
Tagsஒருமணி நேரம் கிடைக்கும் மேடையில் இவை அத்தனையும் எழுதி வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து வாசிக்காமல் மனதிலிருந்து ஒருவனால் பேச முடிகிறது. 

மண், மலை, மழை, நீர் மேலாண்மை, ஆற்று மணல், விலங்குகள் மற்றும் பறவைகள் நலன், விவசாயிகள் தற்கொலை, அந்நிய முதலீட்டு எதிர்ப்பு, சமமான கல்வி, சமமான தரமான மருத்துவம், மீனவ பாதுகாப்புக்கு நெய்தல் படை, விவசாயத்தில் அரசுப்பணி, நாட்டு மாடுகள் பாதுகாப்பு, இயற்கை உரங்கள் உற்பத்தி மற்றும் பயன்படுத்துதல், ஈழத்தமிழர் படுகொலை, வடமாநில தொழிலாளர்களால் தமிழக இளைஞர்களின் வேலை பறிப்பு,  பாரம்பரிய நெல் மற்றும் காய் கணி விதைகள் மீட்பு, பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை, மாநில சுயாட்சி, தாய் மொழி அழிவிலிருந்து மீட்பு, ஐம்பது சதவீதம் பெண்கள் சம உரிமை, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பனைமர வளர்ப்பு, நீர் பொருளாதார கொள்கை, வர்க்க சுரண்டல் தடுப்பு, பறையிசை தெருக்கூத்து சிலம்பம் கலைகள் அழிவிலிருந்து மீட்பு, நிரந்தர மதுக்கடைகள் மூடல், இலவசங்கள் ஒழித்து தனிநபர் வருமானம் உயர்த்தல், அவ்வையார் கண்ணகி வேலுநாச்சியார் உட்பட தமிழ் முன்னோர்களுக்கு விழா எடுத்து நினைவை போற்றுதல், வீடுகளுக்கு சோலார் மின் தகடுகள் பொருத்துதல், தமிழ் கடவுள் முருகனுக்கு பெருவிழா எடுத்தல், லஞ்சம் பெரும் அரசு ஊழியர்கள் நிரந்தர பணி நீக்கம் மற்றும் அரசு சலுகைகள் பறித்தல், மழை பெற காடுகள் உருவாக்குதல்,
 கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், புதிய தடுப்பணைகள் கட்டி கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்தல், தமிழ்வழி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு தனித்திறன் ஆற்றல் வெளிக்கொணர்தல், வாழ்க ஒழிக கோஷம் ஒழித்து காலில் விழும் கலாச்சாரம் ஒழித்தல், விளையாட்டு வீர வீராங்கனைகளை அரசு செலவில் வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தல், சிற்றூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி நகராட்சிக்கு நிகரான நவீன கட்டமைப்பை உருவாக்குதல், பணி நேரத்தில் வேலையில் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிரந்தர பணி நீக்கம், ஏழு தமிழர்கள் விடுதலை, சுங்கச்சாவடிகளை நிரந்திரமாக மூடுதல், விவசாய உற்பத்தி பொருள்களுக்கு விவசாயியை விலை நிர்ணயம் செய்து கொள்ள கொள்கை வகுத்தல், விவசாயத்தில் கூட்டு பண்ணைமுறை மற்றும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்தி அதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், பள்ளியில் குழந்தைகளுக்கு சாலை விதிகளை கற்றுக்கொடுத்து பழக்குதல், பள்ளிகளில் நீதிக்கதைகள் போதித்தல், காவல் துறைக்கு எட்டு மணிநேர பணி மற்றும் லஞ்ச எண்ணம் வராமல் தடுக்க இரட்டிப்பு சம்பளம், அரசே விவசாயம் செய்தல், கடல்வள பாதுகாப்பு, கனிமவள பாதுகாப்பு, பத்தாண்டுகள் பசுமை திட்டம், பல கோடி பணைத்திட்டம், தற்சார்பு பொருளாதாரம், ஊருக்கு ஒதுக்குபுறமான அரசு நிலங்களில் ஏரிகள் உருவாக்கி மழை நீரை தேக்குதல், சாலை விதிகளை கடைபிடித்தலை கட்டாயமாக்குதல், சாலையோர நிலைக் காற்றாடிகளில் மின்சாரம் தயாரித்தல்.........
இன்னும் எத்தனையோ திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி பேசுகிறார்...

கம்ப ராமாயனத்தை எழுதியவர் சேக்கிழார் என்றும் சுதந்திர தினத்தையே மாற்றி கூறி தடுமாறும் தலைவர்களின் மத்தியில் இங்கு இருக்கும் இத்தனை பிரச்சனைகளும் ஒரு அரசியல் கட்சி தலைவரின் சிந்தனைக்கு போயிருப்பதே பெரும் ஆச்சர்யம் தான். சரிசெய்யப்பட வேண்டியவைகளை பட்டியலிடுகிறார். இவற்றில் பாதியை நிறைவேற்றினாலே தமிழகம் ஓரளவுக்கு தலைநிமிரும். இவற்றை செய்ய நாம் தமிழருக்கு வருடங்கள் பல ஆனாலும் காத்திருப்போம். இப்போதைக்கு #விவசாயி சின்னத்தில் வாக்களித்து வலு சேர்ப்போம்.