நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 4, 2019

கோழிக் குஞ்சை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த பணத்துடன் மருத்துவமனை சென்ற சிறுவன் – மனிதத்தை வெளிப்படுத்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

Thursday, April 04, 2019
Tags


கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய 6 வயது சிறுவன் அதை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவன் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டார். இதனால் பதறிப்போன சிறுவன் கோழிக்குஞ்சை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி பல முயற்சிகளை செய்துள்ளார். கோழிக்குஞ்சு இறந்து போனது தெரியாமல் அதனை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறு கையில் தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சிறுவன் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

அப்போது மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் சிறுவனின் இளகிய மனதை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுவன் ஒரு கையில் பணத்துடனும் மறுகையில் இறந்து போன கோழிக்குஞ்சுடனும் இருப்பதை செவிலியர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த அவசர உலகில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் கூட கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் மனிதர்கள் மத்தியில் 6 வயது சிறுவன் தான் கோழிக்குஞ்சு மீது சைக்கிள் ஏற்றிவிட்டோம் என்பதற்காக அதை காப்பாற்ற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் குழந்தைகளுக்கே உரித்தான இளகிய மனதையும் உண்மையான அன்பையுமே பறைசாற்றுகிறது.