நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 27, 2019

ஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்?


இடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது. 

காத்தான்குடியை தனது தளமாக கொண்டிருந்த அமைப்பு அங்கு பள்ளிவாயல் ஒன்றை தனியாக அமைத்து அப்பள்ளிவாயலிலேயே இந்த உலகம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானது என்றும் அல்லாவை ஏற்காதவர்கள் அனைவரும் காபீர்கள் என்றும் காபீர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்றும் பகிரங்கமாக பிரசங்கம் செய்து வந்தது. 

இவ்வாறு அந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு மனித குலத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டபோது அவ்வமைப்புக்கான சகல ஆதரவினையும் வழங்கி வந்துள்ளான் கிழக்கு மாகாண ஆழுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா என்ற அடிப்படைவாதி. 

ஹஸ்புல்லா இவ்வமைப்பு எதிர்காலங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்றது என்பதை நன்கு அறிந்திருந்தவனாகவே பாராளுமன்றில் இலங்கை மக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தான். 

அவன் விடுத்த அச்சுறுத்தலில் இஸ்லாமியர் இந்நாட்டில் யுத்தத்தை ஆரம்பிக்கின்றபோது 60 ஆண்டுகளானாலும் அதை நிறுத்த முடியாது என்று தெரிவித்திருந்தான். அவ்வாறாயின் அவனுக்கு ஆரம்பமாகவுள்ள யுத்தத்தின் வியூகங்கள் யாவும் தெரியும் என்பதே அர்த்தமாகின்றது. 

இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையும் அவர்களை உற்சாகப்படுத்துவதையும் கீழுள்ள படத்தில் காணலாம். அவ்வாறாயின் இதுவரை இலங்கை பாதுகாப்பு தரப்பு ஹிஸ்புல்லாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.  


தவ்ஹீத் ஜமாத் உள்ளுர் முஸ்லிம் தலைவர்களாலும் அரசியல்வாதிகளாலும் போஷிக்கப்பட்ட அமைப்பாகும். எனவே குறித்த தாக்குதல்களுடன் பல முஸ்லிம் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பது தெளிவான நிலையில், விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்துடன் புதிய நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. 

அந்த நாடகமே ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு கொலைகளுக்கு உரிமைகோரியமையாகும். 

ஆகவே இத்திசைதிருப்பல்களுக்கு இடமளியாது ஹிஸ்புல்லா , றிசார்ட் பதுயுதீன் , முஜிபிர் றஃமான் , அசாத்சாலி போன்ற அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும். 
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!