நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 18, 2019

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா?அனைவரும் பகிருங்கள் 
அன்பு உறவுகளுக்கு வணக்கம் கடந்த திங்கட்கிழமை அன்று மல்லாவி துணுக்காய் பகுதியில் ஓர் விபத்து இடம் பெற்றிருந்தது அவ்விடத்திலே ஓர் இளைஞன் உயிர்நீத்தார்.
அவருடைய உடல்  முல்லைத்தீவில் அமைந்துள்ள மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது மறுநாள் செவ்வாய்க்கிழமை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது அதாவது அவ்வுடலை யாரும் பார்வையிட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது ஒரு விபத்தில் இறந்த அவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடிக் கட்ட வேண்டும் உடலைப் பாதுகாக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாத காரணமா?
மருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தமையா? அவனுடைய உறவினர்கள் கடைசி நிமிடத்தில் அவன் முகம் காண துடிப்பதை யார் அறிவார். போராட்ட காலகட்டத்தில் மாஞ்சோலை வைத்தியசாலை என்பது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல உயிர்களை காப்பாற்றி நின்றது. இது உலகறிந்த உண்மை இன்று சகல வசதிகள் இருந்தும் ஓர் உடலைப் பாதுகாக்க முடியவில்லை இது முற்றுமுழுதாக மருத்துவர்களின் கவனம் இன்மையே. இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையிலே பரவி திரிகின்ற  ஊடகங்கள் எங்கே?  குத்தாட்டம் போடுவதை உடனடியாக பதிவேற்றுவீர்கள் சமூகத்தில் நடக்கின்ற இவ்வாறான தப்புகளை எதற்காக மூடி மறைக்கிறீர்கள்?
உடனடியாக சகல ஊடகங்களும் இது தொடர்பான தகவல்களைத் திரட்டி அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை உதவிபுரிய வேண்டும் . எமக்கு எழுகின்ற சந்தேகங்கள் அவருடைய உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா? இல்லையென்றால் எதற்காக இவ்வாறு மூடி கட்டப்பட வேண்டும்? எனது அன்பு நண்பர்களே இப்பதிவினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் வரை பகிருங்கள்

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!