நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

சீமான் என்று ஒரு பெருந்தலைவன்! தேர்தல் அரசியலுக்காக தமிழ்த்தேசிய கொள்கையில் எந்தவித சமரசமும் செய்யாத ஒரு தலைவன்..

Tuesday, April 16, 2019
Tagsகொள்கையை விற்று கூட்டணி பேரம் பேசாத ஒரு தலைவன்..

பத்திரிக்கையாளர்களுக்கு  பதிலளிக்கவே பதுங்கும் தலைவர்களுக்கு மத்தியில்..
 சமூக வலைதளங்களில்  விமர்சனம் எழும்போதுகூட அதை மதித்து தனது தரப்பு  விளக்கத்தை அளிக்கும் ஒரு கட்சியின் தலைவன்.. 

மக்களின்  பிரச்சனைகளை வைத்து  வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு நடுவில்...
 பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சொல்லி  அரசியல் பேசும் ஒரு தலைவன்..

உரைநிகழ்த்தும்போது மட்டுமல்ல நண்பர்களுடன் உரையாடும் போதுகூட நல்ல  தமிழில் மட்டுமே பேசக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிய ஒரு தலைவன்.. 

வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்வது இம்மண்ணில் விளையும் தானியங்களை உண்பது என்ற தமிழ்தேசிய அரசின் இலக்கு என்று நின்றுவிடாமல்..
 இளநீருக்கும்,  மரபுவழி உணவுக்கும்  திருவிழா கண்ட ஒரு தலைவன்...

கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், காவிரி, பணமதிப்பிழப்பு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட மக்களின் ஒவ்வொரு வாழ்வாதார பிரச்சினைகளிலும் மக்களுக்கு எதிராக நிற்காத  ஒரே தலைவன்..

சரிபாதி இடங்களில் பெண்களை நிறுத்தி நூற்றாண்டு கனவினை நொடியினில் நிறைவேற்றிய ஒரு தலைவன்..

தமிழ் மண்ணின் பெரியார் ஐயா நம்மாழ்வார் கண்ட கனவான
இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் ஆர்வத்தை  இளைய தலைமுறையிடம் ஏற்ப்படுத்திய ஒரு தலைவன்..

தமிழர் சிலைகளில் படிந்திருந்த சாதிய தூசுகளை துடைத்தெறிந்து தமிழ் மண்ணின் தலைவர்களென அடையாளப்படுத்திய ஒரு தலைவன்..

சாதி கடந்து, மதம் கடந்து, தேசமும் கடந்து உலகத் தமிழர்களை  ஒன்றிணைத்த ஒரு தலைவன்..

தமிழர் பண்பாட்டு மீட்பு, 
தமிழ் மொழி மீட்பு, 
தமிழ் நில மீட்பு,
 தமிழக நதி மீட்பு, 
தமிழ் இன மீட்பு என வெறும்
 தேர்தலுக்கான அரசியலாக இல்லாமல்  ஒரு
தேசிய இனத்திற்கான அரசியல் பேசும் ..

சீமான் என்று ஒரு பெருந்தலைவன்.

- தமிழ வேள்