நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

விடுதலைப்புலிகளின் தவறான முடிவிலேயே தமிழர்களிற்கு அழிவு ஏற்பட்டது; அந்த அனுபவத்திலேயே ரணிலை காப்பாற்றுகிறோம்: சிறிநேசன் சர்ச்சைப் பேச்சு!

Wednesday, April 17, 2019
Tags


 
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தவறிழைத்துள்ளோம். வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என ஒரு கட்டுப்பாட்டை விதித்தோம். வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்துதிருந்தால் மகிந்த ராஜபக்ச என்பவர் ஜனாதிபதியாக வந்திருக்கமாட்டார். தமிழ் மக்களு அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டிருக்காது.
நாம் தவறிழைத்ததாலேயே விபரீதமான ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். அதிலிருந்து படிப்பினையை பெற்றதன் காரணமாக மீண்டும் தவறிழைக்க மாட்டோம் என்று சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டு பகுதியில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மற்றும் சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்ற அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மங்கிக்கட்டு ஸ்டார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் சிவகுமார் முன்னிலையில், சித்தி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா்.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா, வவுணதீவு பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் கே.சசீந்திர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மங்கிக்கட்டு பகுதியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அங்கு உரையாற்றும்போதே, 2005 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விடுதலைப்புலிகள் எடுத்த முடிவை காரசாரமாக விமர்சித்தார் ஸ்ரீநேசன்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது-

“கடந்த ஆட்சியில் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். பேசுவதற்கு சுதந்திரம் இல்லை. நடமாடுவதற்கும் கூட சுதந்திரம் இல்லாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இன்று ஓரளவு சுதந்திரம் கிடைக்கிறது. அபிவிருத்திகளை செய்யக்கூடிய நிலை இருக்கிறது. கடந்த கால ஆட்சியை விட முன்னேற்றமான நிலை இருக்கிறது. இந்த ஆட்சியாளர்களிடமிருந்து நல்லவை பலதை பெற முடியும்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு 500கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள். கிழக்கு அபிவிருத்தி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வாழைச்சேனை காகித ஆலை உட்பட பல தொழிற்சாலைகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இருக்கிற சந்தர்ப்பத்தினை விட்டுவிட்டு, பிழையான முடிவுகளை எடுத்து, பின்னர் அது பற்றி சிந்திப்பதில் பலனில்லை. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு தவறு செய்தோம். வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என ஒரு கட்டுப்பாடு விதித்தோம். விபரீதமான ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். வடக்கு கிழக்கில் விபரீதமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதிலிருந்து ஒரு படிப்பினையை நாங்கள் பெற்றதன் காரணமாக, மீண்டும் மீண்டும் பிழை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தற்போதுள்ள இரண்டு தேசியக் கட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தே நாங்கள் செயற்பட வேண்டிய நிலையுள்ளது. வேறு ஒரு கட்சியை வானத்திலிருந்து வந்து இங்கு ஆட்சி செய்ய போவதில்லை என்பதை நாங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். யாரோ அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, யாரோ அமைச்சு பதவிகளை பெற்று சுகபோகங்களை அனுபவிப்பதற்காக நாங்கள் இருப்பதை கவிழ்த்து விட்டு துயரப்படுவதற்கு தயாராக இல்லை. 2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்திருந்தால் மஹிந்த ராஜபக்ச என்பவர் ஜனாதிபதியாக வந்திருக்க மாட்டார். தமிழ் மக்களும் இவ்வளவு துன்பப்பட்டு இருக்கமாட்டார்கள். கடந்தகால படிப்பினையை சரியாக கற்றறிந்த பின்னர்தான் நிகழ்காலத்தில் நாங்கள் முடிவுகளை எடுக்கிறோம்“ என்றார்