நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

மட்டக்களப்பில் இருந்து சுற்றுலா வாகனமே விபத்தில் சிக்கியது: ஒரே குடும்பத்தின் ஏழு பேர் பலி; இரட்டைக் குழந்தைகளும் பலி!

Wednesday, April 17, 2019
Tagsமகிங்கணையில் இன்று ஹைஏஸ் வாகனமும், பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். ஹைஏஸ் வாகனத்தில் பயணித்த ஒரு குடும்பத்தின் ஏழு உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதில் இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில 2002 உயர்தரம் வர்த்தகப்பிரிவில் கற்ற அன்ரனி லிஸ்டர் அலக்ஸ்சாண்டர் மற்றும் அவரது மனைவி, இரட்டைக்குழந்தைகளும் உயிரிழந்தனர்.

அன்ரனியின் தந்தை ஓமானில் இருந்து இலங்கை வந்த நிலையில், அம்பாறைக்கு சுற்றுலா சென்ற நிலையிலேயே வாகனம் விபத்தில் சிக்கியது. சாரதி, இன்னொருவரிடம் வாகனத்தை செலுத்த கொடுத்தபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சாரதியின் நித்திரை மயக்கமே விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், வாகன சாரதியும், மனைவியும், இன்னொரு இளைஞனும் கொல்லப்பட்டனர்.

யமஹா நிறுவன மட்டக்களப்பு கிளையின் தலைமை மெக்கானிக்காக அன்ரனி லிஸ்டர் பணிபுரிந்து வந்தார்.