நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, April 12, 2019

வடமாகாணத்தின் முதலாவது நாய்கள் சரணாலயம் புதிய சுவான வடிவ கோயிலில் காவலனாக பைரவப் பெருமான்.

Friday, April 12, 2019
Tagsதான் மட்டுமே வாழ்ந்தால் போதும் என நினைக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் பிற ஜீவராசிகளும் நன்றாக வாழ வேண்டும் என எண்ணம் படைத்தோர் சிலரே உள்ளனர். அந்த வகையில் சிவபூமி நிறுவனம் ,திருவாசக அரண்மனை  பல அற நிலையங்களை அமைத்த கலாநிதி திரு. ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் அடுத்த முயற்சியாக உருவானதே இந்த நாய்கள் சரணாலயம்.
மனிதனுக்கு மிக நெருக்கமான நன்றி நிறைந்த பிராணியாக நாய் உள்ளது. இந்த நாய்கள் பல தெருவிலும் கட்டாக்காலியாகவும் கவனிப்போர் அற்றும் காணப்படுகின்றன. ஆதரவு அற்ற அவற்றிற்கு சரணாகதியாக அமைந்ததே இந்த நாய்கள் சரணாலயம். இது இயக்கச்சியிலுள்ள சிவபூமி வளாகத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் 12.04.2019 மாலை 04.00 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
இங்கு  விசேடமான விடயம் என்னவென்றால் இந்த சரணாலயத்தின் இறைவனாக காவல் தெய்வம் சுவான வாகனர் க்ஷேத்ர பாலகரான பைரவப் பெருமான் விளங்குகின்றார். அதுவும் சாதாரணமாக அல்ல புதிய வடிவில் காவல் தெய்வமான அவரின் காவலனான நாயின் உருவமுள்ள சந்நிதியிலே திரிசூலமும் உடுக்கையும் நாகபாசமும் கபாலமும் முண்ட மாலையும் தரித்து  இதழில் புன்னகை கொண்டு அக்னி சடையுடன் ஆனந்த கோலாகலனாக காட்சி தருகிறார். சிற்பவித்தகர் க.புருசோத்தமன் அவர்களால் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு கடந்த 10.04.2019 புதன்கிழமை குடமுழுக்கு இடம்பெற்றது. இந்த அறப் பணியில் பங்கேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"அன்பே சிவம்"

திருச்சிற்றம்பலம்.