நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

பற்றியெரிந்த நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் தேன்றிய இயேசு ! பரிஸ் வாழ் மக்கள் நெகிழ்ச்சியில்!கடந்த திங்கட்கிழமை இரவு பாரிஸ் நகரத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கிய பழம் பெரும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது இயேசு நிற்பதை போன்ற புகைப்படத்தை இளம்பெண் ஒருவர் வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த 38 வயதான லெஸ்லி ரோவன் என்கிற பெண் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அந்த தீ பிழம்பிற்கு நடுவே இயேசு நிற்பதாக கூறியுள்ளார்.

நான் நேற்று இரவு இந்த புகைப்படத்தை பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். இந்த உலகம் முழுவதுமே சோகமாக உள்ள நேரத்தில், இது பாரிசில் உள்ள மக்களுக்கு ஆறுதலளிக்கும் என நான் நினைக்கிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நான் உண்மையாகவே ஒரு தெளிவான படத்தை அதில் பார்த்தேன். நான் அதில் இயேசுவின் நிழலை பார்த்தேன். அத்துடன் அதை பகிர்ந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டேன், என் அவுஸ்திரேலிய சகோதரர் அது இயேசு போல் இருப்பதாகவே கூறினார் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

திடீரென தீப்பற்றி எரிந்ததேவாலயம், தீயணைப்பு வீரர்களின் கடுமையான முயற்சியால் தேவாலயம் முழுவதும் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்பட்டது. பல்வேறு வரலாறுகளை தாங்கி, சுமார் 853 வருடங்கள் நிலைத்து நின்ற இந்த தேவாலயம் சிதைந்து போனது உலகளவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!