நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

உலகின் மிகப்பெரிய ஈருடல் விமானம்; அதிரவைக்கும் தகவல்கள்!

Sunday, April 14, 2019
Tags


முதன்முறையாக உலகின் மிகப்பெரிய விண்வெளிக்காவி விமானம் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது.

மைக்ரோசொப்ட் இணை நிறுவுநர் போல் அலன் என்பவரால் 2011ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Stratolaunch நிறுவனம் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளது.

இது விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் செயற்கைக் கோளுக்கான வான் ஏவுதளமாக செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விண்வெளியில் செயற்கைக்கோளை அனுப்புவதற்கு முன்னராக பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானத்தை பறக்கவைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விமானம் செயற்கைக்கோளை அனுப்புவதில் வெற்றிபெறுமாக இருந்தால் விண்வெளியில் ஏராளமான பொருட்களை அனுப்பமுடியும் என்றும், அவற்றினை அனுப்பும் விண்கலங்களுக்கான செலவினைவிட மலிந்த முறையில் அனுப்பிக்கொள்ளமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இரட்டை உடலைக்கொண்ட இந்த விமானத்தில் ஆறு ஜெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கையின்போது இந்த விமானம் 15000 அடிவரை பறந்து மணித்தியாலத்துக்கு 274 கிலோமீட்டர் வேகத்தை எட்டியது.