நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 1, 2019

இனத்துவேசத்தை வளர்க்காமலிருக்கவே பௌத்த மாநாடாம்: ஆளுனர் சொல்கிறார்!


வவுனியாவில் நேற்று (29) நடைபெற்ற பௌத்த மாநாட்டின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

இது பௌத்த மாநாடு என்றாலும் அனைத்து மதங்களுடனான பேச்சுவார்த்தையின் ஆரம்பமாக இருக்கும். வட மாகாணம் பல போர்களை கண்ட மாகாணமாக முடிந்திருக்கிறது. எத்தனையோ இராணுவங்கள் தமது விருப்பு வெறுப்புகளை செய்த மாகாணமாக இருக்கிறது. இனி மேலும் இந்த மக்கள் எந்தவிதமான கஸ்டத்திற்கும் உட்படக் கூடாது. ஆனால் போரின் பின்னர் ஆங்காங்கே சி லசம்பவங்கள் நிகழ்ந்திருப்பது உங்களிற்கு தெரியும். அதனை உடனடியாக சரிசெய்ய முடியாத படியினாலே, அதற்கான நீதியை வழங்க முடியாதபடியினாலே தான் அது வளர்ந்து வந்துள்ளது.

எனவே சில சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் கரிசனையுடன் இருக்கின்றோம். இந்த மாநாட்டின் நோக்கம் மதசார்பின்மை. அனைவரையும் ஒரு இடத்திற்கு கொண்டு வருவதே. அவர்களிற்கு இருக்கும் கஸ்டங்கள் சவால்களை ஒரு குழுவாக சந்திப்பதுவே.

வடமாகாணத்தில் இருக்கின்ற மொழி,மத,கலாசார வேற்றுமைகளை ஏற்றுகொள்கின்றோம். அடுத்தவர் தம்முடைய மத ,மொழி, கலாசாரத்திற்கு எந்தளவு மரியாதை கொடுக்கிறாரோ அந்த மதிப்பையும், மரியாதையும் கொடுப்பதற்கு நாங்கள் இணங்குகின்றோம். எந்த ஒரு காரணத்திற்கூடாகவேனும் மதத்தை இன்னொருவர் மீது திணிப்பதற்கோ, வலுகட்டாயபடுத்துவதற்கோ நாங்கள் முன்வரமாட்டோம். எந்த விதத்திலும் வன்முறையையும், இனத்துவேசத்தையும் வளர்க் கமாட்டோம் என்பதுவே இந்த மாநாட்டில் நாம் எடுத்துக் கொண்ட பிரகடனம்.

போர்களமாய் இருந்த இந்த பூமியில் இருதரப்பிற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்தையை ஆரம்பிக்க முன்வந்தவரே இந்த விகாரையின் பௌத்தபிக்கு. போரின் உச்சகட்டத்திலும் அவரது பணி சிறப்பிற்குரியது. வடமாகாணத்தில் நடைபெறும் பௌத்த விடயங்கள் இவரது மேற்பார்வையில் நடக்க வேண்டும். அவர் தமிழ் மக்களையும், பௌத்ததையும் நேசிப்பவர் என்று தெரிவித்தார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!