நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 29, 2019

யாழில் இன்று அதிகாலை பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்!


யாழ்ப்பாணம் குருநகர் பகுதி 51 ஆவது படைப்பிரிவு இராணுவம், கடற்படையினர், விசேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இன்று மேற்கொண்டனர்.

அதிகாலை 4 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை குருநகர் கடற்கரையை அண்டிய பகுதியென்பதால் கடல் வழியால் தாக்குதல்தாரிகள் உள்நுழையலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றிவளைத்து தேடுதல் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முப்படையினர் களம் இறக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பற்று வருகின்றன.

அந்தவகையில் பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதகள் ஆகிய இடங்களில் இராணுவம், கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். அந்த வரிசையில் மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!