நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, April 12, 2019

முகாம்களின் மீது இந்திய படையினர் தாக்குதல்: ஆதாரங்களை மறைக்கும் பாகிஸ்தான்

Friday, April 12, 2019
Tags


பாகிஸ்தானின் தீவிரவாதப் பயிற்சி முகாம்களின் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான ஆதாரங்களை அந்நாடு மறைத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப்படையினர் அண்மையில்  தாக்குதல் நடத்தினர். ஆனால் அச்சம்பவம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்களையும் இரகசியங்களையும் பாகிஸ்தான் மறைத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய  பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட சர்வதேச ஊடகவியலாளர்கள் அவ்விடத்தை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பகுதியை சிறிது நேரமளவே பார்வையிட பாகிஸ்தான் இராணுவம் அனுமதித்ததாகவும் சில இடங்களை பார்வையிட அனுமதிக்கவில்லையெனவும்  அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.