நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

தற்போது அம்பாறையில் பதற்றம்! நிறுவனங்களிலிருந்து அவரசரமாக வெளியேறும் ஊழியர்கள்!

அம்பாறை பொத்துவில் பகுதியில் வெடிபொருள் இருப்பதாக இன்று காலை 10 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் விரைந்துள்ளனர்.

இதனால் அம்பாறையில் பதற்ற நிலை காணப்படுவதாக எமததுபிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொத்துவில் ஊறணிப்பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து இவ்வீதியால் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்திற்கு வெளியிடங்களிலிருந்து வேலை நிமித்தம் வருகை தந்திருந்தவர்கள் உடனடியாக வெளியேறிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.