நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 2, 2019

ஜனாதிபதியின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது – சிறிதரன்

ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டிய அதி உத்தம ஜனாதிபதி அண்மையில் பேசிய பேச்சுக்கள் இந்த நாட்டிலே ஒரு கடுமையான இனவாதத்தை வெளியிட்டதாகவே என்னால் உணர முடிகின்றது.

மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் விருப்போடு வாக்களித்தார்கள். அவர் நல்லதைச் செய்வார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இவர் ஒரு நீதியை வழங்குவார். நிலைமாறு கால நீதிப்பொறியின் நான்கு தூண்களையும் இவர் நிமிர்த்தி பிடிப்பார் என்ற எண்ணங்களை எல்லாம் கொண்டுதான் தமிழர்கள் அவருக்காக வாக்களித்தார்கள்.

எனினும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் தற்போது கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.