நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

யாழ்ப்பாணத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட கும்பல்.. மாணவனுக்கு வெட்டு! வைத்தியசாலைக்குள் பதற்றம்

Sunday, April 14, 2019
Tags


யாழ்ப்பாணம், வரணி இயற்றாளையில் பகுதியில் நண்பர்கள் கூடி மது அருந்திவிட்டு பெரும் கலேபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

சம்பவத்தில் மீசாலையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 19 வயதுடைய மாணவனே வெட்டுக்காயத்துக்கு இலக்காகி உள்ளார்.

வைத்தியசாலைக்குள் கும்பல் மோதலில் ஈடுபட அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டனர். 

எனினும் பொலிஸார் வருவதற்குள் முன்னர் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பித்தமை குறிப்பிடத்தக்கது.