நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 11, 2019

"எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்!" என்கிறார்கள்... எதை???எங்கள் உறவுகள் பிறப்புறுப்புகள் கிழிக்கப்பட்டு அம்மணமாக்கப்பட்டு தெருவோரங்களில் துண்டங்களாகி வல்லூறுகளுக்கு இரையாக்கப்பட்ட கொடுமைகளையா??

கைகளை பின்னால் கட்டி உடைகள் களைந்து கோழைகளாக பின்னால் நின்று வரிசையாக சுட்டு வீழ்த்தியதையா?

எங்கள் இசைப்பிரியாக்கள் கதற கதற சிதைக்கப்பட்டு கொன்ற கொடுமைகளையா?

பிணங்களை கூட புணர்ந்த இழி புத்தியையா?

இல்லை பிள்ளைகளை கூட கொன்று புசித்த கொடுமைகளையா?

வாய் கிழிய வக்கணையாக இணக்கம் பற்றி பேசும் 
தமிழ் தலைமைகளுக்கெல்லாம் இதன் வலி என்னவென்று தெரியுமா...?

அவர்கள் வீடுகளில் இழவு விழுந்திருந்தால் புரிந்திருக்கும்.

எங்கள் மண்ணுக்காக போராடியவர்களையும் மறக்க மாட்டோம்!

அவர்களை உயிரோடு வதைத்து கொன்ற இழியர்களையும் மறக்க மாட்டோம்!

மண்ணுக்காக போராடியவர்கள் கனவுகளை எங்கள் உள்ளங்களில் சுமக்கின்றோம்!

இங்கே இணக்கத்திற்கு இடமில்லை!

விடுதலை ஒன்றே எங்கள் மூச்சாக கொண்ட தமிழர்கள் நாங்கள்!