நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

மன்னாரில் குடிநீரில் கழிவு நீர் கலப்பு! இதற்கு யார் பொறுப்பு?

Sunday, April 14, 2019
Tagsமன்னார்.
15/04/2019
மன்னார் நகரில் தேசிய குடிநீர் வடிகால் வாரியத்தினால் மன்னார் நகர மக்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டு வருகின்றது .

இன்று காலை மக்களின் பாவனைக்காக வந்த நீரின் நிலை தான் இது ..
எமது மக்களிடம் பணம் அறவிட்டே நீர் வழங்கி வருகின்றீர்கள்.
அதைவிட அங்கு வேலை செய்பவர்கள் அரச ஊதியத்திலே வாழுகின்றீர்கள்.
மக்களுக்கான குடி நீரை ஏன் சுகாதாரமான சுத்தமான நீரை வழங்க முடியவில்லை ..
இந்த நீரை எமது மக்கள் பருகினால் பல்வேறு நோய் தொற்றுக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு பல தடவைகள் குடிநீர் வருகிறது இதனை கருத்தில் கொள்ளாது தட்டி கழித்து அசமந்த போக்காக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதனால் எமது மக்கள் விசனமடைந்துள்ளனர்.
இதற்கு காரணமானவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா என எதிர் பார்க்கின்றோம்..

மனோகிரிதரன்.