நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 3, 2019

மத வன்முறைகளைத் தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறைகளைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திருக்கேதீஸ்வரம் கோயில் பிரச்சினை அரசியல்மயமாக்கப்படுவதோடு, இரண்டு சமூகங்களுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக உள்ளது.
தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இனமாக வாழ்ந்து வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக மாந்தை காணப்பட்டது. தற்போது திருக்கேதீஸ்வரம் கோயில் பிரச்சினை காரணமாக மக்களின் ஒற்றுமை உடைந்துள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தொடரவிட்டால், அது சமூகப் பிரச்சினையாக மாறும்” – என்றார்.