நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 9, 2019

விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி உள்ளது – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

Tuesday, April 09, 2019
Tags


தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் தகுதியும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே  கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமம் காணப்படுகிறது. ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டாரே என ஊடகவியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே, தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி உள்ளதென ஜயசேகர குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் உறுதியான பின்னர் தமது ஜனாதிபதி வேட்பாளர் யாரென தீர்மானிப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.