நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 30, 2019

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளின் நிலையத்தில் பயான் செய்த பல்கலை விரிவுரையாளர் கைது

தடை செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாயல்களில் பயான் செய்ததாக  கூறப்படும் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் ஒருவர் முந்தலம் மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் எனவும், நான்கு பிள்ளைகளின் தந்தையாவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரில் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிம் கார்ட் 18 உம், மடிகணினிகள் இரண்டும், ஐ. பேட் கருவி ஒன்றும், கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)