நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 14, 2019

புதுவருடத்தில் இந்து கடவுள்களிற்கும் கிரிபத்… கிளிநொச்சி வைத்தியசாலையில் சிங்கள பாரம்பரிய புதுவருட நிகழ்வுகள்!கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் நேற்று கொண்டாடப்பட்ட புதுவருட கொண்டாட்டம் சிங்கள பாரம்பரியப்படி நடைபெற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கிளிநொச்சி வைத்தியசாலை பெரும்பான்மையினரின் கையில் விழுந்து விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் நேற்று புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த விடுதியில் வழிபாட்டிற்காக இந்து, கிறிஸ்தவ, பௌத்த கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், நேற்றைய சமய நிகழ்வுகள் பௌத்த முறைப்படியே இடம்பெற்றன.

கிரிபத் தயாரிக்கப்பட்டு, இந்துக்கடவுள்களிற்கும் படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. மதங்களிற்கிடையிலான இணக்கப்பாடு இருப்பது அவசியம்தான், ஆனால் தமிழ் பிரதேசத்தின் முக்கிய வைத்தியசாலையில் தமிழர் கலாச்சார புதுவருட நிகழ்வு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.