நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 29, 2019

தஃவா அமைப்புகளைத் தடை செய்யும் நிலை ஏற்படலாம் – என்.எம்.அமீன்


நாட்டில் இயங்கும் தஃவா அமைப்­பு­களை ஒன்­றி­ணைக்கும் காலம் வந்­துள்­ளது. இல்­லையேல் தஃவா அமைப்­புகள் சட்­ட­ரீ­தி­யாக தடை­செய்­யப்­படும் நிலை உரு­வா­கலாம் என முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார்.

விடிவெள்ளி பத்திரிகைக்கு வழங்கியுள்ள பிரத்தியோக செவ்வியில், கொள்கை ரீதியில் முரண்­பட்­டுள்ள தஃவா அமைப்­பு­களை எவ்­வாறு ஒன்­றி­ணைக்­கலாம் என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு ம்,மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்:
நாட்டில் பல்­வேறு தஃவா அமைப்­புகள் இயங்­கி­வ­ரு­கின்­றன. தஃவா அமைப்­புகள் சிறு சிறு விட­யங்­க­ளுக்­கெல்லாம் பிரிந்து சென்று புதி­தாக அமைப்­பு­களை நிறு­விக்­கொள்­கின்­றன. இவ்­வாறு பிரிந்து சென்று உரு­வாக்­கப்­பட்ட அமைப்பே தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகும்.

கொள்கை மற்றும் கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள தஃவா அமைப்­பு­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கு தொடர்ந்தும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் சில அமைப்­புகள் தங்கள் கொள்­கை­களில் விடாப்­பி­டி­யாக இருப்­ப­தாக அறிய முடி­கி­றது. என்­றாலும் தஃவா அமைப்­பு­களை ஒன்­றி­ணைக்கும் காலம் வந்­துள்­ளது. இல்­லையேல் தஃவா அமைப்­புகள் சட்­ட­ரீ­தி­யாக தடை­செய்­யப்­படும் நிலை உரு­வா­கலாம். தீவி­ர­வாத கொள்கை கொண்­டுள்ள அமைப்­பு­களைத் தடை­செய்ய வேண்டும் என தற்­போது உயர்­மட்­டத்தில் பேசப்­பட்டு வரு­கி­றது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!