நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 4, 2019

வெளிவந்த புதிய ஏழு விதிகள் ! சாரதிகளே மிகுந்த எச்சரிக்கை

Thursday, April 04, 2019
Tags1. 25,000 ரூபா அபராதம் – வாகன சாரதி பத்திரம் இல்லாமல் பயணித்தல், மது மற்றும் போதைப்பொருள் பாவனையின் பின் வாகனத்தை செலுத்தல், புகையிரத கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் உள்ளிட்ட ஏழு விதி மீறல்களுக்கு..

2. செல்லுபடியற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தல் மற்றும் வாகனம் செலுத்துவதற்குரிய வயதின்றி வானத்தை செலுத்த முற்படல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் அதிகரிப்பு..

3. அதிக வேகமாக வாகனத்தை செலுத்தல், வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தல் என்பவற்றுக்கான அபராதங்களும் அதிகரிப்பு..

இவற்றின் மூலம் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவோருக்கு 25000 ரூபா – 30000 ரூபா வரையில் அபராதம்.

 இரண்டாம் தடவை அதே குற்றங்களை இழைப்பாராயின் 30000 ரூபா – 40000 ரூபா அபராதத்துடன், 6 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.மூன்றாவது தடவை எனில் 40000 ரூபா – 50000 ரூபா அபராதத்துடன், 12 மாதங்கள் வரையில் சாரதி அனுமதி பத்திரம் ரத்து செய்யப்படும்.

வேகம் (வரையறுக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகம்) 20 வீதம் அதிகம் எனில் 3000 – 5000 ரூபா, 30 வீதம் அதிகம் எனில் 5000 – 10000 ரூபா, 50 வீதம் அதிகம் எனில் 10000 – 50000 ரூபா
இவ்வாறு அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.