Breaking News

சிவசக்தி ஆனந்தனின் கருத்திற்கு சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்



இலங்கையில் தஞ்சமடைந்துள்ள சுமார் 700 வெடிநாட்டு குடும்பங்களை, வடக்கில் குடியமர்த்தும் திட்டத்திற்கு வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

அவர் தனது முகப்புத்தகத்தில்-

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாதிகளின் துன்புறுத்தலுக்கு தப்பி பலர் இலங்கையில் தற்காலிகமாககத் தங்கியிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரின் முடிவு வரும் வரை அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு அநேகமானோர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கியுள்ளார்கள். அரசாங்கம் இவர்களுக்கு பாதுகாப்பான இடங்களை தேடுகிறது. வவுனியாவில் இவர்களுக்கு

தற்காலிக அடைக்கலம் கொடுப்பதற்கு சில தமிழ் அரசியல் தலைவர்கள்எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிகிறேன். அது வருந்தத் தக்கது. தமிழர்களாக எமது மக்கள் வேறு நாடுகளில்தஞ்சம் புகுந்த போது அந்த சமூகங்கள்எப்படியாக எம்மை வரவேற்றுக் காப்பாற்றினார்கள் என்பது எமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

     ஆனால் இவர்கள் எதிர்காலத்தில் எந்த மனநிலையில் இருப்பார்கள்?இவர்களால் தமிழ்ர்களின் இருப்பு கேள்விக்குறியாகுமா என மக்கள் அச்சம்!


No comments

Note: Only a member of this blog may post a comment.