நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, April 26, 2019

வெடி பொருட்களுடன் வெள்ளவத்தையில் மூவர் கைதுவெள்ளத்தை ரயில்வே நிலையப் பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டார்.

இதன்போதுஒரு கிலோகிராம் C4 வெடி பொருட்கள் மற்றும்சந்தேகநபர்கள் வருகை தந்த முச்சக்கர வண்டியொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில்கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரியபண்டார எமது கெப்பிடல் நியூசுக்கு குறிப்பிட்டார்