நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 2, 2019

கரவெட்டியில் கேபிள் ரீவிகளுக்கு தடை! பிரதேச சபை அதிரடி!

Tuesday, April 02, 2019
Tagsமாணவர்களின் கல்வி பின்னடைவுக்கு கேபிள் ரீவிகளும் ஒரு காரணம் என்ற அடிப்படையில் இனி வடமராட்சி கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கேபிள் ரீவிகளில் எவ்வித நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பக்கூடாது என்ற தீர்மானம் இன்று சபையில் நடைபெற்ற அமர்வின் போது அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் எடுக்கப்பட்டுள்ளது.

இது தீர்மானம் வடிவில் மாத்திரம் இல்லாது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டு சிறப்புற செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையாக இருக்கிறது. மிகச்சிறந்த தீர்மானத்தை நிறைவேற்றிய கரவெட்டி பிரதேச சபைக்கு நன்றிகள்!