நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 13, 2019

அப்பா என்பதற்காக கமலுக்கு என் ஓட்டு இல்லை!ஸ்ருதி அதிரடி

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தன் அப்பா நடிகர் கமல்ஹாசன் துவங்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.

சென்ற வாரம் தான் “அரசியலுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு “அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை” என பதில் அளித்திருந்தார் ஸ்ருதி.

இந்நிலையில் “என் ஓட்டு உங்களுக்கு எப்போதும் உண்டு” என ஸ்ருதி ட்விட்டரில் கூறியுள்ளார். அதை விமர்சித்து பேசிய ஒருவர், “எப்போதுமே உங்களுக்குத்தான் என எப்படி சொல்வீர்கள். உறவு என்பதை தாண்டி நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்கவேண்டும்” என ஆட்சேபம் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த ஸ்ருதி, “அவர் என் அப்பா என்பதற்காக ஓட்டு போடவில்லை, அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் அதனால் தான்” என கூறியுள்ளார்.