நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 30, 2019

வெடிகுண்டு தாக்குதலின் பின்னர் தலைமறைவான 4 இளைஞர்கள் படகில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து சிக்கினர் .இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகவிருந்த   இளைஞர்கள் நால்வர் 
மன்னார்- விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் மீனவர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், விடத்தல் தீவு, அடம்பன் பகுதிகளுக்கு வந்துள்ளமை முஸ்லிம் இளைஞர்கள் என  உறுதியாகியுள்ளதாகவும்,
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.