நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, April 28, 2019

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் 40 வருடங்களுக்கு முற்பட்டதா?யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பச்சைப் பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள வர்த்தகரின் வீடொன்றுக்குள் நிலக்கீழ் தளம் (underground ) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர். இந்தத் தேடுதலின் போதே வீடொன்றுக்குள் அமைக்கப்படிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது.

பங்கர் வடிவிலான இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டுள்ளது. அதனைக் கண்டறியாதவாறும் சீமெந்திலான கொங்கிரீட் போடப்பட்டுள்ளது. எனினும் அதற்குள்ளிலிருந்து எவையும் மீட்கப்படவில்லை.

‘அந்த வீட்டில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த நிலக்கீழ் பாதை அமைக்கபட்டதும். வீட்டின் உரிமையாளர் தற்போது இல்லை. அவர் இறந்துவிட்டார் எனவும் , அவருடைய உறவினர்களும் இங்கு இல்லை எனவும் தமிழ் – முஸ்லிம் குடும்பங்கள் இணைந்து விசாரணைகளில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது#underground #muslim #tamil #osmania college #mosque

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!