நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 6, 2019

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் 4 பாஸ்ட்போர்ட்கள் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Saturday, April 06, 2019
Tagsதனது அதிரடியான கருத்துகள் மூலம் பரபரப்பையும், சர்ச்சையும் அவ்வப்போது கிளப்பி வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

இந்திரா காந்தியின் குடும்பத்தினர் குறித்து அவ்வப்போது பரபரப்பான கருத்துகளை கூறி வரும் சுப்பிரமணிய சுவாமி தற்போது காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி குறித்து சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

ராகுலிடம் 4 பாஸ்போர்ட்கள் உள்ளன,  Raul Vinci என்ற பெயரில் அதில் ஒரு பாஸ்போர்ட் உள்ளது எனவும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். ராகுல் பொருளாதார பாடத்தில் தோல்வி அடைந்ததால் M.phil பட்டம் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

தான் ஒரு பிராமணன் என கூறிக்கொள்ளும் ராகுல் உண்மையில் ஒரு கிறிஸ்துவர் என்றும், அவரது வீட்டில் சிறிய ரக தேவாலயம் ஒன்று உள்ளதாகவும், மலையாளி பாதிரியார் ஒருவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையன்றும் அவரது வீட்டிற்கு சென்று அக்கோவியில் பூஜைகள் செய்ய வரவழைக்கப்படுவார் என்றும் சுவாமி தெரிவித்தார்.

பூணூல் எவ்வாறு அணியவேண்டும் என்பதை கூட ராகுல் அறிந்திருக்கவில்லை, ஆடைகள் மேலாக அவர் பூணூலை அணிகிறார் எனவும் சுவாமி தெரிவித்தார்.

ராகுலிடம் 4 பாஸ்போர்ட்கள் உள்ளது தொடர்பாக பாராளுமன்றத்தின் ஒழுக்கவியல் குழுவிற்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக சுவாமி கூறியுள்ளார்.