நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 4, 2019

இரவு வேளையில் பயங்கரம் : 3 குழந்தைகள் பலி ! ஈழத்து பெற்றோர்களே எச்சரிக்கையாக இருங்கள்

 வீட்டில் தொலைகாட்சிப்பெட்டி திடீரென வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குறித்த சம்பவம் இந்தியா உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலும் , உத்தரபிரதேசத்தில் உள்ள கதவுளி கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்றிரவு 4 குழந்தைகள் வழக்கம்போல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர் . அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென தொலைக்காட்சிப் பெட்டி வெடித்தது . இச்சம்பவத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே அமர்ந்து , பார்த்துக் கொண்டிருந்த 4 குழந்தைகளில் , 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் . இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்தனர் .இந்த விபத்தில் ஒரு குழந்தை படுகாயமுற்றதையடுத்து , உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் . மேற்கொண்டுவருகின்றனர் .

இந்த நவீன காலத்தில் ஒவ்வொரு பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் குறும்புத்தனத்தை சமாளிக்க முடியாமல் தொலைக்காட்சியில் கேலிக்கையான நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதித்து . விடுகின்றனர் , இதனால் குழந்தைகள் இவ்வாறான விபத்துக்களினால் பாதிக்கப்படுவது மாத்திரமின்றி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . இது தொடர்பில் தமிழ் பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருங்கள் .

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!