நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, April 29, 2019

இராணுவ சீருடையில் 2 ஆம் கட்ட தாக்குதல்?

உயிர்த்த ஞயிறன்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மிக விரைவில் தமது 2 ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வேன் ஒன்றினை பயன்படுத்தி, இராணுவ சீருடையை ஒத்த சீருடையில் மறைந்திருந்து  இந்த தாக்குதலை அவர்கள் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக் அமைச்சர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெளத்த விகாரைகளில் பெண் தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தும் திட்டமும் இருப்பதாக சந்தேகிக்கும் உளவுத் துறை அது தொடர்பிலும் இரகசிய விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

Virakesari