நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, April 25, 2019

253 பேறே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவல் பிழை – சுகாதார அமைச்சு

இலங்கையில் எட்டு இடங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த எண்ணிக்கை பிழையானது. இவ்வாறான குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்படுவோரின்,

உடல்கள் சிதறி பல பாகங்களாக சிதைவடைவதனால், ஒரே உடலின் ;வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு சடலங்களாக கணக்கிடப்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே இதுவரையில் உறுதி செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் படி, 253 பேரின் உயிர்கள் இந்த குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)