நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

20 வயதில் கள்ளக்காதல்! மாணவி பிரகதி கொலையில் சற்று முன் வெளியான திடுக் தகவல்!

Tuesday, April 16, 2019
Tags


கல்லூரி மாணவி பிரகதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் உறவினர் சதீஷ் குமார் என்பவர் கைது. ஒட்டன்சத்திரம்பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர்  மகன் சதீஷ்குமார் வட்டித் தொழில் செய்து வருகிறார்

பிரகதியும்  சதீஷ்குமாரும் சிறு வயதிலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிரகதிக்கு அவ்வப்போது நகை எடுத்துக் கொடுப்பதும் செலவுக்காக பணம் பணம் கொடுத்தும் வந்துள்ளார்

பிரகதியை திருமணம் செய்து வைக்கக்கோரி சில வருடங்களுக்கு முன்பு கேட்டபோது அதற்கு அவரது பெற்றோர்கள் மறுத்ததால் சதீஷ்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் தற்போது இரண்டு வயது மகள் உள்ளார்.

இந்த நிலையிலும் பிரகதி-சதீஷ் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர் இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகதிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது திருமணத்திற்கு ஒரு மாதம் உள்ள நிலையில் பிரகதி, சதீஷ்குமார் இடம் நகை வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது

இதில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது வெள்ளிக்கிழமை மாணவிக்கு போன் செய்த சதீஷ்குமார் கல்லூரிக்குச் சென்று தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். பூசாரிபட்டி அருகே சென்ற போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே கொலை செய்யும் நோக்கில் சென்ற சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தி உள்ளார் இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்ததால் மாணவியின் உடலை புதருக்குள் தள்ளி விட்டு தப்பினார்.

5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு என்ற மலைப் பகுதியில் பதுங்கியிருந்த சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து தற்போது கோமங்கலம் காவல் நிலையத்தில் விசாரித்துவருகின்றனர்.