நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

யாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் கருகிப் பலி!! மழையில் நடந்த சோகம்!!கூலிக்கு மாரடிப்பவர்களை இயற்கையும் வஞ்சிப்பது வருத்தமளிக்கிறது.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு மயிலங்காடு J/ 203 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள், புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த வேளை நீண்ட நாட்களின் பின்னர், இடியுடன் கூடிய மழை காரணமாக , இடி மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளமை வருத்தமளிக்கின்றது.

 ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மயிலங்காடு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களான அமரர் திருநாவுக்கரசு கண்ணன் வயது 48, அமரர் கந்தசாமி மைனாவதி வயது 52 மற்றும், அமரர் ரவிக்குமார் சுதா வயது 38 ஆகியோர் குப்பிளான் பிரதேச தோட்ட பகுதியில் வேலை செய்திருந்த போதே பலியாகியுள்ளனர்.அவர்களின் ஆத்ம சாந்தியடைய இறைவனை  பிரார்த்திப்போம்.

பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உடனடியாக கள பிரதேசம் மற்றும் வைத்தியசாலைக்கும்  விஜயம் செய்திருந்தனர்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!